காதல் மட்டும் போதும்


அன்பினால் தோன்றிய உன் காதல் – என்
ஆயுள் வரை வேண்டும்.
கண்ணீர் ஊற்றி பூத்த நம் காதல் – என்
காலம் முழுதும் மலர வேண்டும்.
உன் நினைவு என் உயிரோடு உய்கிறது.
என் கனவு அதிலும் உன் முகமே தெரிகிறது.
தொலைத்த என் வாழ்வை,தேடுகிறேன் உன் மனதில்.
நான் மண்ணோடு மறைந்தாலும்
உன் மனதோடு வாழ்ந்தால் போதும்.
உனை அன்றி யாரையும் எண்ண முடியாது என் வாழ்க்கை என்று.
உன் துணையின்றி உலகில் வாழ முடியாது என்னால் இன்று.
நீ இல்லா வாழ்வில் நான் வாழ்வதை விட,
என் கல்லரை மேல் உன் கை பட்ட பூக்கள் சுமக்கிறேன் நிம்மதியாக..!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்