உன்னை கட்டி அணைக்கத்தான் ஆசை..
உன்னை கட்டி அணைக்கத்தான் ஆசை..
ஆனால் என் வெட்கத்தால் அதை செய்யாமல் கடந்து போகிறேன் உன்னை.
என் கரங்களை நீ பற்றிக்
கொள்ள மாட்டாயா
என என் கண்கள் ஏக்கம்
கொண்டாலும்,
தூரத்திலும் நம் காதல்
அழகாக இருக்கிறதே
என்று எண்ணம் கொள்ள
வைக்கிறாய் நீ..
தூரத்தில் நீ என்னை பார்க்கும் போது உன் அனல் வீசும் பார்வையால் நான் உறைந்து போகிறேன்.
மீண்டும் ஒருமுறை உன் பார்வை என் மேல் பட்டு விடாத என்று ஏக்கம் கொண்டு சாகிறேன்..
உன் விரல் நுனி பிடித்து என் வாழ்க்கை தொடங்க ஆசை.
உன் ஒரு சொல்லில் என் வாழ்வை முழுதாய் உன்னோடு வாழ்ந்திட ஆசை.
என்னை கடந்து மட்டும் செல்லாதே
உன் மேல் நான் கொண்ட காதல் என் உயிரை குத்தி குத்தி வதைக்கிறது..
உன் மேல் ஒரு குருட்டு காதலியாய் ஆனேன்.
உன் காதல் தவிர எனக்கு வேறொன்றும் வேண்டாம்..
காலம் முழுதும் வருவேன் உனக்கான காதலை என் நெஞ்சில் சுமந்தபடி..
கடைசி வரை இருப்பேன் உன்னோடு
என் இறுதி மூச்சு அடங்கும் வரை..
கடைந்துவிட்ட தயிர் பானையாய் என் இதயம் கொப்பளிக்கிறது அதை வடிகட்டி தேற்ற நீ வர மாட்டாயா.
நீ உடன் இல்லாத போதும் உன் சுவாசம் உணர்கிறேன். என் உறக்கத்திலும் உன் வாசம் நுகர்கிறேன்..
என் ஏக்கத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஒரே ஒரு நிமிடம் கொடு. என் கண்களில் காட்டுகிறேன் உன் மேல் நான் கொண்ட காதல் எவ்வளவு என்று..
சுற்றுகின்ற பூமிக்கும் தெரியாது
நான் நின்று கொண்டிருக்கும் நிலத்துக்கும் தெரியாது
இவள் இறைவன் இவளின் இதயம் பறித்த தன் காதலன் என்று.
ஒற்றை காலில் நிற்பேன் உன் காதலை அடைய ஒற்றை உயிரையும் விட்டு விடுவேன் அது என்னை விட்டு உடைய..
இப்படிக்கு,
உன் காதலி
உங்க காதலுக்கு நீங்க எதாவது பரிசு கொடுக்கனுமா கீழே உள்ள Amazon Link Click செய்து purchase செய்து கொள்ளுங்கள்..
இந்த கவிதை Video பார்க்க கீழே உள்ள youtube link ஐ Click செய்யவும்.
https://www.youtube.com/channel/UCqAgTDjOS5NoGl33gcx6o9g
கருத்துகள்
கருத்துரையிடுக