கண்ணீர் மொழிக்கவிதை


கலங்காத கண்கள் வேண்டும் என்று
கலங்கி நின்றேன் நானும்.
மயங்காத மஞ்சம் வேண்டும் என்று
வியந்து நின்றேன் நானும்.

ஒரு பாவமும் அறியாது சிறு தூரமும் நகராது
விழியோரம் ஏனோ இந்த கண்ணீர்.
வலி என்ற வேதனையும் வழி என்ற பாவனையும்
புரியாது கரிந்து போனேன் ஏனோ.

சுற்றி அலைந்த செக்கு மழையில் நனைந்ததிற்கு
துருப்பிடித்த சக்கரம் போல் சுழலாமல் நின்றேன்.
புன்னகையணிந்த மகிழவனின் பெருக்கெடுத்த காவிரியின்
மனம் ஏனோ சஞ்சலம் கொண்டது.

தெரியாமல் நின்றேன் தவியாமல் தவித்தேன்
மகிழ்வு என்ற ஒன்றிற்கு.
என் வேதனை பலருக்கு வேடிக்கை தானோ..


ஆனாலும் எனக்கு மாவடு தானோ..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்