என் அன்பான அரக்கனே..

 


நீரின் மேலே மிதக்கின்ற இலை போலே

 தொடர்வேனே நானும் உன் நிழல் போலே..

உன் விரல் பிடித்த நாள் முதல் 

என் உயிர் முழுதும் நீயே நிறைந்து என்னை ஆழ்கிறாய் என் அன்பான அரக்கனே..


கொன்று விடுகிறாய் உன் அன்பாலே என்னை.. வென்று விடுகிறாய் முழுவதுமாய் என்னை.. என் இதயத்தின் அரசனாக வீற்றிடுவேன் என்றுமே உன்னை..

கொன்று விடுகிறாய் உன் அன்பாலே என்னை.. வென்று விடுகிறாய் முழுவதுமாய் என்னை.. என் இதயத்தின் அரசனாக வீற்றிடுவேன் என்றுமே உன்னை..


கதைத்துக் கிடக்கும் போதும் காதலித்தே கிடக்க வேண்டும் உன்னோடு..

மண்ணோடு போகும் போதும் சாய்ந்தே சாக வேண்டும் உன் மார்போடு..

உன்னோடு வாழ்ந்தே இறந்திடுவேன்..

இறந்த பின்பும் வாழ்ந்திடுவேன் உன்னோடு..


கடிது இல்லை எந்த பாதையும் உன்னோடு போகையில்..

என்றுமே முடிவு இல்லை இந்த நம் காதல் பாதையில்..





மேலும் கவிதை நூல்கள் வேண்டும் என்றால் amazon இணையதளத்தில் பெற கீழே உள்ள link ல் பெற்றுக்கொள்ளவும்.

https://amzn.to/3A5X13S

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்