விடியலை நோக்கி-தீண்டாமை இருளில் இருந்து



வானே இந்த தேசம்
உன் விடியலை விட
பாரத விடியலையே
நோக்கி நிற்கிறது.
எப்போது தோன்றும்?
கண்ணோரம் காத்து நிற்கும்
விடியலை
பாரதத் தாயே
விரைவில் தருவாயோ?
வேண்டி நிற்கிறோம் நாங்கள்.
எங்களை ஈன்ற
பாரதத் தாயே,
நெடுந்தூரம் செய்த பயணம்
பயணில்லை என்றால்
ஏன் பயணம் செய்ய
வேண்டும் – என எண்ணி
தளர்கின்ற மக்கள் உள்ளனரே!
என் செய்வோம் நாங்கள்?

எங்கள் தேசம்
தீண்டாமை எனும்
இருளில் மூழ்கி இருக்கிறதே தாயே.
எப்போது எங்களுக்கு
விடியலை தரப் போகிறாய்?
நாங்கள் காத்துக்கொண்டே இருக்கிறோம்.
காலம் கடந்து கொண்டே இருக்கட்டும்.
விரைவில் விடியல்
தோன்றும் என்ற நம்பிக்கை
என்றும் எங்களுக்கு உண்டு!!

மாற்றம் பல வந்தாலும்,
மனிதர் பலர் மடிந்தாலும்,
மண்ணில் இரத்தம் வழிந்தாலும்,
எங்கள் விடியலுக்காக – என்றும்
பொறுமையாக காத்திருப்போம் – எங்கள்
பாரதத் தாயைப் போற்றி..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்