நான் கண்ட அழகிய மாது




முடிவில்லா பாதையில்
முகம் தெரியா பெண்ணொருத்தி
தனிமையிலே
தனக்கான வழி தேடி
போனாள்!

உள்ளத்தின் ஆழத்தில்
உறுதியாய் தான் இருந்தால் போலும்..
முட்களோடு பாதத்தின் முகத்தில்
உறவாடி விட்டு
நடந்து கொண்டிருந்தாள்! !
வண்ண வண்ண விளக்குகள்,
தோகை தோகையாய் தோரணங்கள் – என்று
காணாத கண்கள்
கானகத்தே செல்லும்
கடுமையான பாதையிலே..

மனதில் உறதியோடு,
மதியில் திறமையோடு – இன்று
”மண்ணே உன்னை நம்பி என் வாழ்க்கை”
என்று எண்ணி,
தலை குனிந்து போகிறாள்
தனிமையில் கானகத்தே..

மண்ணோடு பேசிக் கொண்டு,
மனதில் பாரதத்தோடு,
போகும் பெண்ணே..
இந்த மாலையில்,
பொழுது சாயும் வேளையில்,
தனிமை ஏனடி கண்ணே..

உன்னோடு இல்லாத
அந்த மகிழ்வை,
உன்னுள்ளே தேடு
உடன் வரும் நிம்மதியும்! !

கண்ணுக்கு பிடிக்காத
காட்டு மல்லி பூவும்,
மணத்தால் களவாடி விடும் மனதை..
அது போல
அலங்காரம் இல்லா
உன் அழகு
என் அடி மனதை திருடியது! ! !

விதையில்லை என்றாலும்
சில செடிகள் வளர
வேறு வழிகள் உண்டு..
உன் வாழ்வும் மலர
வழிகள் பல உண்டு! ! !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்