மஞ்சத்தில் மங்கை கொண்ட காதல்
நிலவில் நிழற் தோரணம் கட்டி
வானவில்லை மாலையாய் மாற்றி
மை பூசும் கண்ணுக்கு மையலகு இட்டு
தேவியை தேடி வரும் தேவனே
என்னை கண்டு கொள்….!!!
தேவர்கள் தேடி வரும் மாலையில்
தெய்வங்கள் வாழ்த்த வரும் வேளையில்
நெஞ்சத்தில் நினைவுகள் கொண்டு
பல்லாண்டு வாழ ஆசி பெற்று
மனதெல்லாம் மலர்கள் பூத்துக் குலுங்க
மஞ்சத்தில் மன்னவனைப் பற்றிப் பாடும் கன்னியே,
அவனே உனது கனவுக் கண்ணாளன் என்ற குரல் இசைக்க
இதயத்தில் இரவு கூட பகலாய் மாறிப்போக
கனவில் ஆழ்ந்த கன்னியின் விழிகள் முத்தினை
பாதுகாக்கும் சிற்பியை போல மெல்லத் திறந்தது…!!!
அடுத்த கனம் கன்னியின் கனவு கலைந்து போய் விட….!!!


கருத்துகள்
கருத்துரையிடுக