நிமிர்ந்து பார்



நீளமான பாதை
நேராக இல்லை – கொஞ்சம்
நிமிர்ந்து பார்!
நீ செல்லும் பாதையில் எல்லை இல்லை
உனை மிஞ்சிடும் உன்
நாட்களைப் பார்!
கடலைக் கண்டதும் கண்கள் விரியும்..
காற்றைப் பிடிக்க கைகள் அலையும்..
தோற்றுப்போன உன் வாழ்விலே,
உந்தன் முயற்ச்சிக்குப் பின்
உன்னிடம் அந்த தோல்வியும் தோற்கும் பார்..

எண்ணத்தை தொட்டவுடன் கைக்கு எட்டாது
உன் இலட்சியம்..
நீ தொட்ட உன் எண்ணம் மலையாக இருந்தாலும்
வெட்டி அதன் துகளைத் தான் பார்..
வேதனை கொண்டு வீழ்ந்திருந்தால்
வெற்றியும் உன்னிடம் வெற்றிலை கேட்காது..

சுற்றி நிற்கும் சுள்ளி முட்களும்
சற்று உன் பார்வை பட்டதும்
எட்டி நிற்க எண்ணும்..
மண் பார்த்து நடந்த உன் கண்கள் – இன்று
என் கை கோர்த்து வா – என்று
அழைத்துச் செல்லும் பாதையைக் கொஞ்சம்
நிமிர்ந்து பார்..

நிமிர்ந்த நடை கொண்டு
நேரான பார்வையால் வரும்
துன்பத்தை வென்று – வானில்
வலம் வரும் விண்மீனாய் ஒளி வீசு..

நிமிராத உன் கண்கள்
மிளிராது விண்மீனாய்..
இறுகாத மலைக்கற்கள்
மாறாது சிற்பங்களாய்..
உள்ளது எதுவோ,
அல்லது எதுவோ,
உணர்ந்திட நீயும் நிமிர்ந்திடு..
வானகம் எதுவோ,
கானகம் இதுவோ,
அடையும் முன் வந்த துன்பத்தை
விலக்கிட நீயும் நிமிர்ந்திடு..

கற்களும் உண்டு,
முட்களும் உண்டு,
பெற்ற துன்பத்தை கேடயமாய்க் கொண்டு,
கற்ற வித்தையை வாளாய் ஏற்று,
வெற்றியை பெற்றிட வாராய்
நீயும் நிமிர்ந்து பாராய்!!!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்